Thursday, 22 March 2012

உங்களது மொபைலில் தமிழ் தளங்களை படிக்கலாம்


சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருக்கும். தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியாது.

இதனை சரி செய்ய எளிதான வழிமுறை இருக்கிறது. எப்படி என்பதைப் பார்ப்போம்.

மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை 

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.


2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

5. இப்போது தமிழ் மட்டுமின்றி அனைத்து இந்திய மொழிகளையும் படிக்க முடியும்.

0 comments:

Post a Comment